ETV Bharat / bharat

"ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவை தோற்கடிக்க போகிறது" - ராகுல்காந்தி விமர்சனம்

காங்கிரஸ் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாஜகவை தோற்கடிக்க போகின்றனர் என, ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Rahul gandhi
ராகுல் காந்தி
author img

By

Published : Jun 4, 2023, 4:33 PM IST

நியூயார்க்: அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு சென்றார். பின்னர் நியூயார்க் நகருக்கு சென்ற அவர் அங்குள்ள மன்ஹாட்டான் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இந்திய வம்சாவளியினர், காங்கிரஸ் நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. நாங்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை, அவர்களை அழித்துவிட்டோம். கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜகவை தூக்கி எறிந்தோம். கர்நாடகா தேர்தலை பொறுத்தவரை அனைத்துமே தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என பாஜக எண்ணியது. அதன்படி அனைத்து ஊடகங்கள், 10 மடங்கு பணம், அரசுத்துறைகள் ஆகியவை அவர்கள் பக்கம் இருந்தன. எல்லாமே அவர்களிடம் இருந்த பிறகும், நாங்கள் அவர்களை அழித்தோம்.

அடுத்து தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் பாஜகவை அழிக்க உள்ளோம். அதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இந்த தேர்தலுக்கு பிறகு தெலங்கானாவில் பாஜகவை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பாஜகவை தோற்கடிக்கும் பணியை காங்கிரஸ் மட்டும் செய்யவில்லை. மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில மக்கள் என ஒட்டுமொத்த நாடும் பாஜகவை தோற்கடிக்க போகிறது.

பாஜகவின் வெறுப்பு விரோத கொள்கையால் சமூகம் முன்னேற்ற பாதையில் செல்லாது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதன்படி இன்னும் சில மாநிலங்களில் பாஜக தோல்வியை சந்திக்கும். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் இதே தோல்வியை பாஜக சந்திக்க நேரிடும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒன்றாக பணியாற்றுகிறோம். இது கொள்கை ரீதியிலான மோதல். ஒரு பக்கம் பிரிவினைவாத கொள்கைகளை பாஜக பரப்புகிறது. மறுபுறம் காங்கிரஸ் தலைமையின் கீழ் அன்பை மட்டும் விதைக்கும் கொள்கை செயல்படுகிறது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் மத்தியில் வெறுப்பு வாதத்தை பாஜக விதைக்க முயன்றது. அதை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியும் செய்தார். ஆனால் அங்கு எதுவும் எடுபடவில்லை. கர்நாடகாவில் விலைவாசி உயர்வு, ஊழல், வேலைவாய்ப்பின்மை நிலவும் நிலையில், அங்கு ஆட்சி செய்த பாஜகவை துரத்தி அடித்துள்ளனர் அம்மாநில மக்கள். குறுகிய நோக்குடன் நாட்டை பார்க்கும் பாஜகவினருடன் நாங்கள் மோதுகிறோம். நாம் பிற மதங்களையும், கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும். பிற மக்களையும், பெண்களையும் நாம் மதிப்பது அவசியம் என" கூறினார்.

இதையும் படிங்க: Train accident update: ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.