உத்தரப் பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் உயிருள்ள நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் கேட்டதால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தது.
சலேநகரில் வசிக்கும் சுகானி கவுதம் என்ற பெண் உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவருக்கு சுவாசப் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மே 2ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலை இறுதி சடங்கிற்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்ற போது, அவருக்கு மூச்சு இருப்பதை அவரது குடும்பத்தினர் கண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கு மருத்துவமனையும், அதில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சியமுமே காரணம் என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை - மருத்துவமனையிலிருந்து ஐந்து கைதிகள் தப்பியோட்டம்!