உத்தரப் பிரதேசம் (அலிகர்) : காந்திப் பூங்கா பகுதியிலுள்ள தர்ம சமாஜ் மஹாவித்யாலயா கல்லூரியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் லங்கூர் இனத்தைச் சேர்ந்த குரங்குகளை கல்லூரியில் வைத்து மற்ற குரங்குகளை பயமுறுத்த திட்டமிட்டனர்.
அவைகளின் உரிமையாளருக்கு 9,000 ரூபாய் சம்பளம் தரப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் வெர்மா கூறுகையில், “ மாநகராட்சியின் அலட்சியத்தால் கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகமாகியுள்ளது.
அவைகள் சகட்டுமேனியாக பல மாணவர்களைத் தாக்கியுள்ளன. அதனால் தான் தற்போது கல்லூரியின் 10 இடங்களில் லங்கூர் இனக் குரங்குகளை பணியமர்த்தியுள்ளோம். மேலும், மாணவர்களின் உணவை குரங்குகள் பறித்துச் செல்லாமல் பாதுகாக்க கேண்டீனிலும் லங்கூர் குரங்கை அமர்த்தியுள்ளோம்” எனக் கூறினார். மேலும், அவர் இதுகுறித்து மாநகராட்சிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: குஜராத் போலி மதுபானம்.. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு... 2 எஸ்பிக்கள் பணியிடமாற்றம்...