ETV Bharat / bharat

'அல்கொய்தாவால் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் மேற்கு வங்கம்!'

கொல்கத்தா: பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அல்கொய்தா மேற்கு வங்கத்தில் தனது அமைப்புக்கான கிளைகளை வேகமாகப் பரப்பிவருவதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

'Al Qaeda spreading in West Bengal', Guv Dhankhar attacks Mamata
அல்கொய்தா அமைப்பால் மேற்கு வங்கம் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - ஆளுநர் ஜகதீப் தங்கர்
author img

By

Published : Jan 9, 2021, 9:25 PM IST

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.

அதேபோல, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் களத்தில் தொடர்ந்து பனிப்போர் நிலவிவருகிறது. பல்வேறு விவகாரங்களில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் ஆளும் அரசின் மீதும் ஆளுநர் ஜகதீப் தங்கர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி இன்று (ஜன. 09) ஆளும் அரசை ஆளுநர் ஜகதீப் தங்கர் விமர்சித்துள்ளார்.

'Al Qaeda spreading in West Bengal', Guv Dhankhar attacks Mamata
மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர்

ஊடகங்களிடையே பேசிய ஆளுநர் ஜகதீப் தங்கர், “ஆட்சி அரசியலமைப்பின் பாதையிலிருந்து விலகிச் செல்கிறது. அரசு கிட்டத்தட்ட பற்றி எரியும் நிலையில் உள்ளது. மேற்கு வங்க தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் போன்ற உயர் அலுவலர்களிடம் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எனக்கு விளக்குமாறு கடந்த இரண்டு மாதங்களாக அறிவுறுத்திவருகிறேன். ஆனால் அவர்கள் அது குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

மாநிலத்தில் நிர்வாகம் தொடர்பாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். அவை ஒரு வெளிப்படையான ரகசியமாகவே இருக்கிறது. நான் அவர்களுக்குப் பல நினைவூட்டல்களை அனுப்பியுள்ளேன். ஆனால் அவற்றால் எந்த விளைவும் இல்லை என்பது எனக்கு நிறைய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதனால்தான் எங்களிடம் அரசியல் காவல் துறையினர் இருப்பதாக நான் சொன்னேன். அரசியலை அவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா, மேற்கு வங்கத்தில் தனது அமைப்பைப் பரப்பிவருகிறது. சட்டவிரோத வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள், வெடிபொருள்களைத் தயாரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்” எனக் கூறினார்.

அண்மையில் வெளியான தேசிய புலனாய்வு முகமையின் குறிப்பில், அல்கொய்தா அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : ‘இது தொடர்பாக ட்ரம்பிடம் தொலைபேசி வழியே பேசுவேன்’ - ராம்தாஸ் அத்வாலே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.