பெங்களூரு: 2025-க்குள் மதிய உணவு திட்டத்தின் கீழ் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் என அக்ஷய பாத்ரா நிறுவனம் உறுதி எடுத்துள்ளது.
அக்ஷய பாத்ரா நிறுவனம் தனது சேவைப் பணியின் மூன்றாம் தசாப்தத்தில் காலடி எடுத்துவைக்கிறது. இதை முன்னிட்டு 2025-க்குள் மதிய உணவு திட்டத்தின் கீழ் 5 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2000 நவம்பர் 11 அன்று அக்ஷய பாத்ராவின் முதல் சமையல் கூடம் நிறுவப்பட்டது. இதை அன்றைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோசி மற்றும் கர்நாடக முதலமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதிய உணவு திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் 19,039 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு உணவளித்து வருகிறது. இதை 2025-க்குள் 50 லட்சமாக உயர்த்த அந்நிறுவனம் உறுதி எடுத்துள்ளது.