புதுடெல்லி : சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மூத்தத் தலைவர் ஆசம் கான் ஆகியோர் தங்களின் மக்களவை உறுப்பினர் (எம்.பி.) பதவியை ராஜினாமா செய்தனர்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் மாபெரும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சமாஜ்வாதி மூத்தத் தலைவர் ஆசம் கானும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தத் தகவலை கட்சி நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 48 வயதான அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். இந்த நிலையில் ஆட்சியை பாஜகவிடம் இழந்த போது மக்களவை உறுப்பினர் ஆனார்.
அப்போது அவர் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகினார். எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்ற குற்றஞ்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது மக்களவை பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
பாஜக ஒரு மூழ்கும் கப்பல், என் தந்தை உயிருக்கு ஆபத்து- ஆசம் கான் மகன் பரபரப்பு பேட்டி!
இதனால் அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாஜகவை சரிய வைக்க முடியும் என நிரூபித்துள்ளோம் - அகிலேஷ் யாதவ் ட்வீட்