அசாம் மாநிலத்தை சேர்ந்த சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராளியும், சட்டப்பேரவை உறுப்பினருமான அகில் கோகாய் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். வன்முறையை தூண்டும வகையில் பேசிய குற்றச்சாட்டில் தேசிய புலணாய்வு முகமை(NIA) அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவர் சிறையிலிருந்தே 2021ஆம் ஆண்டு அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனது குடும்பத்தினரையும், தொகுதி மக்களையும் பார்க்க பரோல் கேட்டு அகில் கோகாய் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அகில் கோகாய்க்கு 48 மணிநேரம் பரோல் வழங்கி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தமாரி பகுதியில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று மனைவி, மகனை சந்திக்கும் அகில் கோகாய், பின்னர் சொந்த கிராமத்திற்கு சென்று தாயை சந்திக்கவுள்ளார்.
இதையும் படிங்க: "விவசாயிகளுடன் நான்" வேளாண் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு