ETV Bharat / bharat

"தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ்.." மராட்டியத்தில் மீண்டும் ஒலிக்கும் வாசகம்!

பாஜக - சிவசேனா கூட்டணியி இணையும் முடிவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.

Ajit Pawar
Ajit Pawar
author img

By

Published : Jul 2, 2023, 5:36 PM IST

மும்பை : கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கமே இருப்பதால், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து மகாரஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணையும் முடிவுக்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும், கட்சியின் முழுக் கட்டுப்பாடும் தங்களிடமே உள்ளதால், தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரிலேயே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூறினார்.

கட்சித் தாவல் என பலர் விமர்சித்தாலும் அதற்கு மதிப்பு கொடுக்க மாட்டோம் என்றும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றார். அதனால் தான் ஏக்நாத் ஷிண்டே தலமையிலான அரசில் இணையும் முடிவை எடுத்து உள்ளதாக கூறினார். இந்த முடிவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.

மேலும் மகாரஷ்டிர அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அடுத்து வரும் அனைத்து தேர்தல்களையும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரிலேயே எதிர்க் கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்து, அமைச்சர்களாக பதவியேற்று உள்ளதாகவும், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படுவது குறித்து பின்னர் விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய அளவில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டும் மாநில வளர்ச்சியை ஆதரிக்க வேண்டும் என்று நினைத்து கூட்டணி வைத்து உள்ளதாக அஜித் பவார் தெரிவித்தார். மேலும்பிரதமர் மோடி தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது என்றும் அதனால் நான் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளதாக கூறினார்.

பிரதமர் மோடி தலைமையில் கூட்டணியில் இணைந்து 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்து உள்ளதாக அஜித் பவார் தெரிவித்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியால், சிவசேனாவுடன் கூட்டணியில் இருக்க முடியும் என்றால் பாஜகவுடனும் கூட்டணியில் இருக்க இயலும் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க : 2019ல் விட்டதை 2023ல் பிடித்த அஜித் பவார்... யார் இந்த அஜித் பவார்? மராட்டிய அரசியலின் திருப்புமுனை கதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.