ETV Bharat / bharat

கோவிட் காரணமாக விமான போக்குவரத்துதுறைக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா? - அரசு தகவல் - இந்திய விமானப் போக்குவரத்துதுறை அமைச்சகம்

கோவிட் பெருந்தொற்று காலத்தில் விமான போக்குவரத்துதுறையானது சுமார் ரூ.26,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Civil Aviation
Civil Aviation
author img

By

Published : Mar 29, 2022, 7:05 AM IST

மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் விகே சிங் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். அதில், கோவிட் பெருந்தொற்று காலத்தில் விமானப் போக்குவரத்துதுறையில் ஏற்பட்ட இழப்பு குறித்த தகவலை வெளியிட்டார். அதன்படி, பெருந்தொற்று காலத்தில் விமானநிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடியும், விமான நிலையங்களுக்கு ரூ.5,116 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய இழப்பை சந்தித்துள்ள துறையை மீட்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் அவர் கூறுகையில், விமான கட்டணங்கள் அரசால் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை. விமான போக்குவரத்து 1937-ன் விதிகளின் கீழ் விமான நிறுவனங்கள் நியாயமான கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ளலாம். விமான கட்டணங்கள், விமான நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.

கூடுதல் கட்டணம் ,திடீர் கட்டண உயர்வு ஆகியவற்றை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் விமான போக்குவரத்து சுற்றறிக்கையை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வழித்தடம் வாரியாக, பல பிரிவுகளின் கீழ் சந்தை நிலவரப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.

விமான நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணங்களை வசூலிக்காததை உறுதி செய்ய, சில வழித்தடங்களின் விமான கட்டணங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கிறது எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE : மார்ச் 29 ராசி பலன் - உங்க ராசிக்கு எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.