காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதை அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்த 68 பயணிகளும் 4 விமான குழுவினரும் விபத்தில் சிக்கினர். விமானம் முழுவதும் தீ பிடித்துள்ள நிலையில் மீட்புணிகள் நடந்துவருகிறது.
இதன் காரணமாக பொக்காரா சர்வதேச விமான நிலைய தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனம் தரப்பில், காத்மாண்டுவில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட 9N-ANC ATR-72 என்ற பயணிகள் விமானம் பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் திடீரென்று சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காணரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தாகவும் அதில் 32 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க: நண்பர்களுக்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய இளைஞர்