ETV Bharat / bharat

இஞ்ஜின் கோளாறு காரணமாக சீன விமானத்தில் தீ விபத்து - 9 பயணிகள் காயம்! - ஏர் சைனா ஜெட்லைனர் விமானம்

Fire in Air China jet flight: ஏர் சீனாவின் ஏர்பஸ் ஏ320 விமானத்தின் இஞ்ஜினில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, தீ ஏற்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 9 பயணிகள் காயமடைந்தனர்.

எஞ்சின் கோளாறு காரணமாக சீன விமானத்தில் தீ விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 3:06 PM IST

பெய்ஜிங் (சீனா): ஏர் சீனாவின் ஏர்பஸ் ஏ320 விமானத்தின் இஞ்ஜினில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, தீ ஏற்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 9 பயணிகள் காயமடைந்தனர்.

146 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த ஏர் சீனாவின் ஏர்பஸ் ஏ320 விமானம், நேற்று (செப்டம்பர் 10ஆம் தேதி) மாலை 4:15 மணியளவில் சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சிங்கப்பூரின் ஷாங்கி விமான நிலையத்தின், அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் “சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் இருந்து ஏர் சைனா ஜெட்லைனர் விமானம், 146 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது.

அப்போது விமானத்தின் கேபினுக்குள் உள்ள இஞ்ஜின் தீ பிடித்ததையடுத்து, விமானம் அவசரமாக மாலை 4:15 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 விமானப் பயணிகள் காயமடைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தின் இஞ்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக வெளியேறிய புகையை, அதிகப்படியாக உள்ளிழுத்ததாலும், பயணிகளை அவசரமாக வெளியேற்றும் போது சிராய்ப்பு காயம் ஏற்பட்டு 9 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெட்லைனரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானத்தின் நிலையை விமானி அறிவித்த போது, சில பயணிகள் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். விமான பணிப்பெண்கள், அவர்களை அமைதியாக இருக்கும் படியும், அவர்களது இருக்கையில் அமரும் படியும் கூறினர். அதற்குள் புகையானது கேபினுக்குள் பரவி, விளக்கு வெளிச்சத்தை மங்கலாக்கியது” என்று சீன ஊடகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதோடு, விமான இஞ்ஜினில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தில் ஏற்பட்ட தீ குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இஞ்ஜினில் ஏற்பட்ட இயந்திர கோளாறு தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஏர் சீனா, இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: வி.கே.குருசாமி தாக்குதல் வழக்கு: மதுரையில் ஒருவரை கைது செய்த பெங்களூரு போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.