2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தற்போதே தொடங்கிவிட்டன.
களமிறங்கும் அசாதுதீன் ஒவைசி
இந்தத் தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் எ.ஐ.எம்.ஐ.எம்.(AIMIM) கட்சியும் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்தத் தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேட்பாளர் தேர்வு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுகல்தேவ் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடவுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஒவைசியின் கட்சி மூன்று இடங்களில் வெற்றிபெற்றது. ஒவைசி பெற்ற வாக்குகளே பிகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சொந்த மண்ணைத் தொட்டு தலை வணங்கிய குடியரசு தலைவர்!