டெல்லி: ஹரியானா மாநிலம், கர்னல் பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 12 அன்று நகைக்கடையை கொள்ளை அடிப்பதற்காக சில மர்ம நபர்கள் வந்து உள்ளனர். எனவே, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் உடன் சண்டை போட்டு உள்ளார். அப்போது, அவர்கள் கத்தியால் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதனையடுத்து அவர் வலியால் துடிதுடித்து காணப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது, அவரது முதுகில் கத்தி புகுந்து காணப்பட்டு உள்ளது. இதனையடுத்து மறுநாள் (ஜூலை 13) அவரது முதுகில் பதிந்து இருந்த கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர் என எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் கம்ரான் ஃபர்கூ கூறி உள்ளார்.
முன்னதாக, சம்பவம் நடந்த அன்று மதியம் 2 மணிக்குள் இரண்டு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர் அழைத்துக் கொண்டு செல்லப்பட்டு உள்ளார். ஆனால், தாக்கப்பட்ட வீரியத்தை உணர்ந்த மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரை செய்து உள்ளனர். மேலும், அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தபோது, அவர் தனது சுயநினைவை இழந்து காணப்பட்டதாக ஃபர்கூ கூறுகிறார்.
அது மட்டுமல்லாமல், “முதுகில் குத்தப்பட்ட இந்த சிகிச்சை மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. பாதிக்கப்பட்டவரின் நிலை சாதாரண நிலைக்கு முற்றிலும் மாறாக இருந்தது. இதனால் கற்பனையிலும் நடக்காத அளவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் நகர்ந்தாலும் கூட கத்தி இன்னும் அதிகமான ஆழத்திற்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் அவரது முதுகுத்தண்டு பாதிப்பு அடையும்.
இதயத்தில் இருந்து அரோட்டாவிற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் பகுதியில் இருந்து 2 முதல் 3 மில்லி மீட்டர் தொலைவுக்கு அப்பால் கத்தி முனை இருந்தது. குறைந்தபட்சம் 6 இன்ச் அளவிலாவது கத்தி முதுகின் உள்ளே இருந்திருக்கும்” என அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் அமீத் குப்தா கூறினார்.
மேலும், சிடி ஸ்கேன் மூலம் பார்த்தபோது, வெர்டப்ரல் பகுதியில் எலும்பு உடையும் அளவு கத்தி பாய்ந்து இருந்து உள்ளது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நபரின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 12 செ.மீ நீளமுள்ள டூத் ப்ரஷை விழுங்கிய நபர்!