ETV Bharat / bharat

கூட்டணி கட்சிக்குப் போன தொகுதி: கண்கலங்கிய அமைச்சர்!

author img

By

Published : Mar 16, 2021, 12:10 PM IST

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாலும், தனிப்பட்ட காரணங்களாலும், வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஆதரவாளர் மத்தியில் கண்கலங்கினார்.

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அவரது ஆதரவாளர் மத்தியில் சில காரணங்களால் தொகுதி மாறுவதாக கண்கலங்கி பேசினார்

கடந்த 2001 சட்டப்பேரவை உழவர்கரை தொகுதியில் தமாக சார்பில் போட்டியிட்ட நமச்சிவாயம் வெற்றி பெற்றார். 2002ஆம் ஆண்டு முதல் முதலாக வேளாண்மைத்துறை அமைச்சராக பதவியேற்றார். 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

2016இல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் மறுசீரமைக்கபட்ட வில்லியனூரில் வெற்றி பெற்று பொதுப்பணி துறை அமைச்சராக பதவி வகித்தார். இதனிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் ஆதரவாளர்கள் மத்திய பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக வில்லியனூர் தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கண்கலங்கினார். ஆனால் வில்லியனூர் தொகுதி மக்கள் எப்போதும் அணுகலாம் எனறும் அவர் கூறினார்.

வில்லியனூர் தொகுதியில் போட்டியிடும், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு முழு மனதுடன் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.