ETV Bharat / bharat

அகமதாபாத் டூ லண்டன்: விண்டேஜ் காரில் சுற்றுப்பயணம் செய்து உருவாகும் ஆவணப்படம்

அகமதாபாத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 1950ஆம் ஆண்டின் விண்டேஜ் காரில் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் வரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதை ஆவணப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 9, 2023, 5:41 PM IST

Updated : Aug 9, 2023, 6:13 PM IST

அகமதாபாத் டூ லண்டன்: விண்டேஜ் காரில் சுற்றுப்பயணம் செய்து உருவாகும் ஆவணப்படம்

குஜராத்: உலகத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், அந்த சுற்றுலாவைத் தனித்துவமாக்குவதும், பிறரது கவனத்தை ஈர்ப்பதும் மிக அரிது. அந்த வகையில்தான், குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அங்கிருந்து லண்டன் வரை விண்டேஜ் காரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். சாலை மார்க்கமாக 16 நாடுகளைக் கடந்து சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கவுள்ளனர். அது மட்டுமின்றி அவர்கள் தங்கள் பயணத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில், அதை ஆவணப்படமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் இந்தப் பயணம் வரும் அக்டோபர் மாதம் லண்டனைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகமதாபாத்தைச் சேர்ந்த தமன் தாகூர் என்பவருக்குச் சொந்தமான இந்த காரை, அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தந்தை தேவல் தாகூர் வாங்கியுள்ளார். அன்று முதல் இந்த காரின் கதையைக் கேட்டு வளர்ந்த தமன் தாகூர், தான் இளம் பருவத்தை எட்டிய உடனேயே அதன் பராமரிப்பில் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் நீண்ட நெடிய வாழ்க்கை பயணத்தில் குடும்ப உறுப்பினராகவே மாறிய அந்த விண்டேஜ் காருக்கு, லால் பாரி மற்றும் ரெட் ஃபேரி எனச் செல்ல பெயர் வைத்து, அந்த குடும்பம் அழைத்து வருகிறது.

சாலையில் சென்றால் அனைவரது கண்களும் திரும்பிப் பார்க்கும் வகையில் 'பளீச் என்ற பிங்' நிறத்தில் உள்ள விண்டேஜ் காருக்கு தற்போது 73 வயதாகிறது. பழமையான இந்த காரை பராமரிக்கத் திட்டமிட்ட தமன் தாகூர், கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்து உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து காரை புதுப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சாலை மார்க்கம் செல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாக தமன் தாகூர் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான வழக்கை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து அந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்த தமன் தங்களின் விண்டேஜ் கார் சுற்றுலா பயணத்தை ஒரு ஆவணப்படமாகவும் எடுக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது விண்டேஜ் காருடன் சேர்ந்து, அதற்குத் தோழனாக லால் பாரி கி சஹேலி மற்றும் ரெட் ஃபேரியின் நண்பன் எனப் பெயரிடப்பட்டுள்ள டாடா விங்கர் கேம்பர் வேனும் லண்டன் சென்றுள்ளது.

இந்த பயணத்தில் தமன் தாகூரின் தந்தை தேவல் தாகூர், மகள் தேவன்ஷி, ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் வினாய் பஞ்வானி, விண்டேஜ் கார் நிபுணர் முகேஷ் பராரியா, புகைப்பட கலைஞர் ஒருவர் உள்ளிட்டோர் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.

அகமதாபாத்தில் உள்ள உலக ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் உலகின் மிக உயரமான வல்லபாய் பட்டேல் சிலையில் இருந்து தொடங்கும் இந்த விண்டேஜ் கார் பயணம் வரும் அக்டோபர் மாதம் லண்டனைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: IND vs WI: சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்.. குல்தீப் யாதவ் சாதனை.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

Last Updated : Aug 9, 2023, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.