ETV Bharat / bharat

பிரதமர் மோடி ஆட்சியில் வேளாண்துறைக்காக ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - பிரஹலாத் சிங் பட்டேல் - Prahlad Patel on Agri budget rises

பிரதமர் மோடி ஆட்சியில் வேளாண்துறைக்காக ரூ.6.22 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

பிரஹலாத் சிங் பட்டேல்
பிரஹலாத் சிங் பட்டேல்
author img

By

Published : Dec 14, 2022, 10:43 PM IST

டெல்லி: நாட்டில் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், பிரதமர் மோடி ஆட்சியில் 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வேளாண்துறைக்காக மட்டும் ரூ.6,21,940.92 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் இன்று (டிசம்பர் 14) செய்தியாளர்களை சந்தித்த பிரஹலாத் சிங் பட்டேல் கூறுகையில், 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வேளாண்துறைக்கான மத்திய பட்ஜெட் ரூ.1,48,162.16 கோடியாக இருந்தது.

ஆனால், 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வேளாண்துறைக்கான பட்ஜெட் ரூ.6,21,940.92 கோடியை எட்டியுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை ரூ.2.16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்த உதவிகள் நேரடியாக அவர்களை சென்றடைகின்றன. இதன்மூலம் விவசாயிகள் எளிமையான முறையில் வர்த்தகம் செய்கின்றனர். அவர்களுக்கு அரசின் உதவிகளை பெறுதல் எளிதாக இருக்கிறது. குறிப்பாக, இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமார் 2 கோடி விவசாயிகள் இணைத்துள்ளனர். இதன் மூலம் 11.37 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக 2021-22ஆம் ஆண்டில் ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்வள அட்டை திட்டத்திற்காக 22.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் விவசாய கடன் ஒதுக்கீடு ரூ. 7.3 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் அரசாங்கம் ரூ.18.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் மூலம் 3.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்காக ரூ.46.86 கோடி நிதி விடுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.