புவனேஷ்வர்: ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, சரியாக 19.30 மணிக்கு அக்னி-4 என்ற பாலிஸ்டில் இடைநிலை-தடுப்பு ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனை, ஏவுகணைக்கான எல்லா தர மதிப்பீடுகளையும் வெற்றிகரமாக உறுதி செய்துள்ளது. ஏவுகணை அமைப்பின் நம்பகத் தன்மையையும் இது உறுதி செய்துள்ளது. மேலும், நம்பகமான குறைந்தபட்ச தற்காப்பை பெறுவதற்கான இந்தியாவின் கொள்கையை இந்த ஏவுகணை சோதனை உறுதி செய்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறாரா கிம் ஜாங் உன்?