ஸ்ரீநகர் : அண்மையில் உள்ளூர் பத்திரிகைகளில் பணிபுரியும் பத்திரிகையாளர் சிலருக்கு எதிராக சமூக வலைதளத்தில் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர். அதில் பாதுகாப்பு படையினருக்காக அவர்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் 12 பத்திரிகையாளர் இடம்பெற்றுள்ளனர். அதில் இரு நாளிதழ் தலைமை செய்தி ஆசிரியர்களும் அடக்கம்.
இந்நிலையில் 5 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். அதில் 3 பேர் தங்கள் ராஜிமானா கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தலுக்கு பின்னணியில் லஷ்கர் இ தொய்பா கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க ; இந்தியாவில் வாழும் அனைவரும் இந்து: ஆர்எஸ்எஸ் தலைவர்