ஜாஷ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் கோர்வா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இது மலைப்பகுதி என்பதால் வன உயிரிகள் அதிகம் உலவுவது வழக்கம். மேலும் அடிக்கடி பலரை பாம்பு கடிக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.
இந்நிலையில் நேற்று(அக்-30) அப்பகுதியை சேர்ந்த தீபக் ராம் என்ற 12 வயது சிறுவனை பாம்பு கடித்தது. பாம்பு கடித்ததில் கோபமடைந்த அச்சிறுவன் மீண்டும் பாம்பை இருமுறை கடித்துள்ளான். இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்தது.
இதனையடுத்து பெற்றோர்களிடம் சிறுவன் தெரிவித்துள்ளான். பின்னர் சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது அச்சிறுவன் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஷ்பூர் மலை கிராமத்தில் பாம்பு கடித்தால் அதனை திருப்பி கடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை கோர்வா பழங்குடியின மக்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குஜராத்தில் பாலம் விழுந்து விபத்து..!