ETV Bharat / bharat

"தலைவர் சஞ்சய் சிங் என்றால் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்" - மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்! - இந்திய மல்யுத்த சங்கம் தலைவர் தேர்தல்

Sakshi Malik announce quit from wrestling: பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசி சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிலையில், மல்யுத்தம் விளையாட்டில் இருந்து விலகுவதாக வீராங்கனை சாக்‌ஷி மாலிக் அறிவித்து உள்ளார்.

Sakshi Malik
சாக்‌ஷி மாலிக்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 5:57 PM IST

டெல்லி : இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவி விலகக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் தள்ளிப்போனது. ஏறத்தாழ 11 மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங்கிற்கும், காமல்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அனிதா ஷெரோனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், எண்ணிக்கையில் சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ஷெரோன் 7 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவரான சஞ்சய் சிங் அம்மாநில மல்யுத்த சம்மேளனத்தின் துணை தலைவராக இருந்தார்.

தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் கடந்த 2019ஆம் ஆண்டு சம்மேளனத்தின் இணைச் செயலாளராகவும் அவர் பதவி வகித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக அறியப்படும் சஞ்சய் சிங், பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • #WATCH | Delhi: Wrestler Sakshi Malik breaks down as she says "...If Brij Bhushan Singh's business partner and a close aide is elected as the president of WFI, I quit wrestling..." pic.twitter.com/26jEqgMYSd

    — ANI (@ANI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மல்யுத்த விளையாட்டை விட்டு விலகுவதாக வீராங்கனை சாக்சி மாலிக் அறிவித்து உள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன் என சாக்சி மாலிக் தெரிவித்து உள்ளார்.

மேலும், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கியதாகவும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகாரில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் சாக்சி மாலிக் கூறினார. மேலும், தங்களுக்கு பெண் தலைவர் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், தலைவராக ஒரு பெண்ணாக இருந்தால், பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாது என்று கூறினார்.

இதற்கு முன்னரும், தற்போதும் பெண் தலைவரின் பங்களிப்பு இல்லை என்பது மல்யுத்த சம்மேளனத்தில் இல்லை என்றும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படுவதில்லை என்றும் சாக்சி மாலிக் தெரிவித்தார். முழு பலத்துடன் போராடி வருவதாகவும் இந்த போராட்டம் தொடரும் என்றும், அடுத்த தலைமுறை வீரர், வீராங்கனைகள் போராட வேண்டும் என்றும் சாக்சி மாலிக் கூறினார்.

இதையும் படிங்க : இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல்! வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்த அதிர்ச்சி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.