மும்பை: சிறு அறிகுறிகளுடன் தனக்கு கரோனா பாசிட்டிவ் இருப்பதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். 35 வயதான துல்கர் சல்மான் தனது தந்தையும் உச்ச நட்சத்திரமுமான மம்முட்டிக்கு கரோனா தொற்று உறுதியான பின்பு கோவிட்-19 சோதனை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிக்கையாகப் பதிவிட்டு அச்செய்தியைப் பகிர்ந்திருந்தார். மேலும் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், "எனக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளேன், மேலும் எனக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறது. மற்றபடி பெரியளவில் பிரச்சினைகள் எதுவுமில்லை.
கடந்த சில நாள்களாகப் படப்பிடிப்பில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள், ஒருவேளை அறிகுறி தென்பட்டால் கரோனா சோதனை செய்துகொள்ளுங்கள்" என்றார்.
-
Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022
கடந்த 16ஆம் தேதியன்று மம்முட்டி கரோனா சோதனை எடுத்துக்கொண்ட செய்தியை பகிர்ந்திருந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 70 வயதான மம்முட்டியின் சிபிஐ 5 திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபுதாபி ட்ரோன் தாக்குதல்: இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் வருகை!