ETV Bharat / bharat

அடுத்த டார்கெட் தெலங்கானா... கட்டம் கட்டி வீழ்த்த துடிக்கும் காங்கிரஸ்... வீழ்வாரா கே.சி.ஆர்!

கர்நாடகா, இமாச்சல பிரதேசம் என இருவேறு மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் தற்போது அதன் பார்வை தெலங்கானா மீது திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தவும் தேர்தல் வியூகம் வகுக்கவும் மூத்த தலைவர்களுடன் தேசிய தலைவர் மல்லிகர்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளனர்.

Congress
Congress
author img

By

Published : Jun 26, 2023, 10:11 PM IST

டெல்லி : இமாச்சல பிரதேசம், கர்நாடக என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் காங்கிரஸ் கட்சி தற்போது தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றது முதலே சீரிய நடவடிக்கையில் களமிறங்கி உள்ள மல்லிகார்ஜூன கார்கே அண்மையில் சொந்த மாநிலமான கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றி கொடுத்து அதீத கவனத்தை ஈர்த்து உள்ளார். இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கேவின் பார்வை தெலங்கானா பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் கே சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை (பிஆர்எஸ்) விட்டு வெளியேறிய அதிருப்தி தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தி உள்ளார்.

பாரதிய ரஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் மற்றும் சில பிஆர்எஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் தங்களை காங்கிரசில் இணைத்துக் கொண்டனர்.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து அதிருப்தி காரணமாக மூத்த தலைவர்கள் விலகி உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 80 இடங்களை கைப்பற்ற மல்லிகார்ஜூன கார்கே திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மாநிலத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் அணியினர் இணைந்து ஜூன் 27ஆம் தேதி தெலங்கானா சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பேசிய தெலாங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே, பி.ஆர்.அஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தெலுங்கானாவில் காற்று மாறி, காங்கிரஸ் பக்கம் வீசுவதாகவும் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டு வருவதற்கான பாதையில் செல்வதையே இவர்களது இணைப்பு காட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் கர்நாடகாவை போன்று தெலுங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று அவர் கூறினார்.

தெலுங்கானா தேர்தலை ராகுல் காந்தி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மாநிலத்தில் பாஜகவை விரட்ட பிஆர்எஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர உள்ளதாக பரவும் தகவல் வதந்தி என்றும் கூறினார். மேலும் பிஆர்எஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராடுவதாக தெரிவித்தார். பிஆர்எஸ் என்பது பாஜகவின் பி டீம் என்றும் இருவரையும் தோற்கடிக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என்று மாணிக்ராவ் தாக்ரே கூறினார்.

முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் தலைமையில் ஏறத்தாழ 40 மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெஜ் பாஸ்தாவில் சிக்கன் துண்டுகள்! கடுப்பான பயணிகள்... ஐஆர்சிடிசி ஊழியர் பணியிடை நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.