ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் வட்டத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பு, 12 வயது சிறுமியை நாகி ஹாசன், முகமது ராசி ஆகிய இரண்டு சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சிறுமி கர்ப்பமாகி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது குழந்தையின் டிஎன்ஏவையும், குற்றம்சாட்டப்பட்ட இருவரின் டிஎன்ஏவையும் பெற்று, அதை ஒப்பிட்டு சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, முகமது ராசியை போலீசார் நேற்று(ஆகஸ்ட் 2) இரவு கைது செய்தனர். முகமது ராசியின் டிஎன்ஏ, குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒன்றிப்போனதால், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மனதை உலுக்கும் உருக்கமான நிகழ்வு - இறந்த தாயைக் கட்டியணைத்து உறங்கிய 5 வயது குழந்தை!