சீதாப்பூர் : சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் ஆசம் கான். இவரது மகன் அப்துல்லா ஆசம். இவர்கள் இருவர் மீதும் 43 குற்ற வழக்குகள் உள்ளன.
இதையடுத்து இருவரும் சீதாபூரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அப்துல்லா ஆசம் இன்று (ஜன.16) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ஆசம் கான், ராம்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஆசம் கானின் மகன் அப்துல்லா சமாஜ்வாதி தரப்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
இவர் இதற்கு முன்பு 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ராம்பூரில் உள்ள ஸ்வார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இருப்பினும், 2019 டிசம்பரில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது 25 வயதுக்குக் குறைவானவர் என்ற அடிப்படையில் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவித்தது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஆசம் கானுக்கு உச்ச நீதிமன்றம் பிணை!