ETV Bharat / bharat

ஆப்கனில் பறக்கும் விமானத்திலிருந்து மூவர் விழுந்த நிகழ்வு: உயிரிழந்த தேசிய கால்பந்து வீரர்! - ஆப்கன் விவகாரம்

ஆப்கனில், அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில், அந்நாட்டின் கால்பந்து வீரரும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

Afghan footballer
Afghan footballer
author img

By

Published : Aug 20, 2021, 9:53 AM IST

Updated : Aug 20, 2021, 4:54 PM IST

காபூல்: அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்தே தலிபான்கள் ஆதிக்கம் அங்கு அதிகரித்துவிட்டது. 10 நாள்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி ஆப்கனைக் கைப்பற்றி விட்டனர். அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் அதிபர் மாளிகை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.இதனைத்தொடர்ந்து, தலிபான்கள் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து ஆப்கன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டு, ராணுவ விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க: இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை

இதனால் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இதனிடையே, ஆகஸ்ட் 16ஆம் தேதி சிலா் அங்கிருந்து புறப்பட்ட தயாரான அமெரிக்க ராணுவ விமானத்தின் வெளிப்புற பகுதிகளில் தொற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். விமானம் பறக்கத் தொடங்கியதும், மூன்று பேர் கீழே விழுந்து உயிரிழந்தனா்.

விமானத்திலிருந்து விழுந்தவர்களில் தேசிய கால்பந்து வீரரும் ஒருவர்

விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கன் நாட்டின் தேசியக் கால் பந்து வீரர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் விளையாட்டுத் துறை இயக்குநர், " கடந்த திங்கள் கிழமை ஆப்கனின் தேசிய கால்பந்து அணி வீரரான ஜக்கி அன்வாரி (19), அமெரிக்காவின் போயிங் சி-17 விமானத்தில் ஏற முயற்சித்துள்ளார். அவர் விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வெளிப்புற பகுதியில் தொற்றிக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் விமானம் புறப்பட்டதும் கீழே விழுந்து உயிரிழந்தார். அவருடன் மேலும் இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தவிர்க்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிங்க: விமானத்தில் தொங்கியபடி சென்ற மூவர்; நடுவானில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு!

Last Updated : Aug 20, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.