புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜன.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என ஓபிஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பும் முன்வைத்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை இன்று (ஜன.5) மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பயிர்கடன் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய அறிவிப்பு!