ETV Bharat / bharat

பழங்குடியின மக்களை அவமதித்தாரா பிரதமர் மோடி? ஆதிவாசி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்! - ஆதிவாசி காங்கிரஸ்

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் பழங்குடியின மக்களை பிரதமர் மோடி அவமதித்து விட்டதாக கூறி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிவாசி காங்கிரஸ் தலைவர் தெரிவித்து உள்ளார்.

Modi
Modi
author img

By

Published : May 25, 2023, 10:41 PM IST

டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காமல் பழங்குடியின மக்களை அவமதித்ததாகவும், இதை கண்டித்து மே. 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அனைத்து இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜி ராவ் மோகே தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளரகளை சந்தித்த அவர் கூறியதாவது, "குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த பெண் திரவுபதி முர்மு இருப்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அப்படி இருக்கையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வரும் மே. 28ஆம் தேதி புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் குடியரசு தலைவரை திறப்பு விழாவிற்கு கூட அழைக்கவில்லை.

முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தலித் இனத்தைச் சேர்ந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்கவில்லை. இது நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரை மட்டுமல்ல, பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும்.

இந்த அநீதிக்கு எதிராக நாளை (மே.26) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். குடியரசுத் தலைவர் என்பவர் ஆயுதப்படைகள் மீது உச்ச அதிகாரம் கொண்டவர் மட்டுமல்ல, நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் கொண்டவர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதற்கு 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், பிரதமர் இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்தாதது ஏன்.

பிரதமர் மோடி பழங்குடியின மக்களை அவமதிக்க விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான இத்தகைய மனநிலை பாஜகவில் எப்படி உருவானது. பழங்குடியினர் காடுகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர் இதை மனதில் வைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2006 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களை பாதுகாக்க சட்டம் இயற்றினார்.

ஆனால் பாஜக பழங்குடியினரை மதிக்கவில்லை, மேலும் அந்த சமூகத்தை வனவாசி என்று தொடர்ந்து அழைத்து வருகிறது. இது இழிவான வார்த்தையாக கருதப்படுகிறது. வனவாசி என்ற வார்த்தையை ஏன் மாற்ற முடியாது. அது பழங்குடியின மக்களின் உணவுர்களை காயப்படுத்தும் வகையில் உள்ளது.

புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை வைத்து திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல. முடிவை மாற்றுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரை அழைத்து திறந்து வைக்க வேண்டும்" என்று சிவாஜி ராவ் மோகே தெரிவித்தார்.

இதையும் படிங்க : கரோனாவை விட கொடூர தொற்று தாக்கும் அபாயம்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.