புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்துவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த துணை நிலை ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார், சுகாதாரத் துறை இயக்குனர் அருண், அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, துணை நிலை ஆளுநர் தெரிவித்தார்.
பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதையும், நெரிலைத் தடுக்க நடைமுறையில் உள்ள ஊடரங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. அதாவது கோயில்களில் பொது வழிபாட்டிற்குத் தடை, ஓட்டல்கள், தேனீர் கடைகள், மதுக்கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி; வணிக வளாகம், உடற்பயிற்சி கூடம், சலூன்கள், அழகு நிலையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் திருமண விழாக்களில் 50 பேரும், இறுதி நிகழ்வுகளில் 25 பேரும் பங்கேற்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.