பெங்களூரு விமான நிலையம் சென்ற நடிகர் விஜய் சேதுபதியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கும் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், விஜய் சேதுபதி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, பின்னே ஒருவர் ஓடிவந்து உதைக்கிறார்.
உடனே அருகில் இருப்பவர்கள் அந்த நபரை தடுத்து வாக்கும்வாதம் செய்கின்றனர். விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாஸ்டர் செஃப் படப்பின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இறுக்கி அணைத்து உம்மா கொடுத்த ரஜினி - இயக்குநர் சிவா நெகிழ்ச்சி!