பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என கர்நாடகாவில் தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும், இன்று (செப்.29) கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழில் ‘சித்தா’ என்ற திரைப்படம் கர்நாடகாவில் 'சிக்கு' என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள திரையரங்கில் நேற்று (செப்.28) நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கர்நாடகா காவிரி போராட்ட அமைப்பினர், தமிழ் நடிகருக்கு இங்கு என்ன வேலை என கடுமையாகப் பேசினர். இதனையடுத்து, நிகழ்வின் பாதியில் நடிகர் சித்தார்த் வெளியேறிச் சென்றார்.
இந்த நிலையில், இன்று (செப்.29) தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு கன்னட திரைத்துறை நடிகர்கள், நடிகைகள் பலர் தங்களது ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரு குருராஜ் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் போராட்டத்தில் நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா, ஸ்ரீமுரளி, தர்ஷன், யோகி, சிக்கண்ணா, ஸ்ரீநாத், ஓம் சாய் பிரகாஷ், ரகு முகர்ஜி, தபலா நானி, விஜயராகவேந்திரா, ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, நடிகைகள் உமாஸ்ரீ, பூஜா காந்தி, அனு பிரபாகர், ரூபிகா, ஸ்ருதி மற்றும் திரைப்படக் கலைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி கலைஞர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மும்பை சென்சார் போர்டு மீது புகாரளித்த நடிகர் விஷால்; மத்திய அமைச்சகம் விசாரணை!
இந்த போராட்டத்தில் நடிகர் சிவராஜ் குமார் பேசும்போது, “காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் மிக உணர்ச்சிப் பூர்வமான பிரச்சினை. இதற்கு நீதிமன்றம் மூலமாகவே தீர்வு காண வேண்டும். பிரச்னைகளில் ஈடுபடுவதால் பயனில்லை. நேற்று (செப்.28) தமிழ் நடிகர் சித்தார்த் சில நபர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதனை யார் செய்தார்கள், எதற்காகச் செய்தார்கள் என்று தெரியவில்லை.
-
Instead of questioning all the political parties and its leaders for failing to solve this decades old issue.. instead of questioning the useless parliamentarians who are not pressurising the centre to intervene.. Troubling the common man and Artists like this can not be… https://t.co/O2E2EW6Pd0
— Prakash Raj (@prakashraaj) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Instead of questioning all the political parties and its leaders for failing to solve this decades old issue.. instead of questioning the useless parliamentarians who are not pressurising the centre to intervene.. Troubling the common man and Artists like this can not be… https://t.co/O2E2EW6Pd0
— Prakash Raj (@prakashraaj) September 28, 2023Instead of questioning all the political parties and its leaders for failing to solve this decades old issue.. instead of questioning the useless parliamentarians who are not pressurising the centre to intervene.. Troubling the common man and Artists like this can not be… https://t.co/O2E2EW6Pd0
— Prakash Raj (@prakashraaj) September 28, 2023
காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறுகள் தொந்தரவுகள் செய்வது தவறு. அதனால் யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள். மேலும் நேற்று (செப்.28) நடைபெற்ற சம்பவத்திற்குத் தமிழ் நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X பக்கத்தில், "பல தசாப்தங்களாக தொடரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாகவும், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக சாமானியர்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்களைத் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கன்னடர்கள் சார்பாக மன்னிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சித்தார்த்தை சூழ்ந்த கன்னட அமைப்பினர்.. நடந்தது என்ன?