ETV Bharat / bharat

நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்: தனியார் மருத்துவமனை தகவல்!

நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sarath babu
சரத்பாபு
author img

By

Published : May 4, 2023, 6:42 PM IST

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்துடன் வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் கடும் அவதியடைந்து வந்தார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள AIG தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னை காரணமாக வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சரத்பாபுவின் உடல்நலம் குறித்து நேற்று (மே 4) சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. எனினும் அதை மறுத்த அவரது குடும்பத்தினர், தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், சரத்பாபு உடல்நலம் தேறி வருவதாகவும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடல்நலம் குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். மக்கள் தவறான செய்தியைப் பகிர வேண்டாம். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சரத்பாபு குடும்பத்தினரிடம் இருந்து வரும் செய்திகளை மட்டும் நம்புங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Actor Sarath Babu is Stable: நடிகர் சரத்பாபு நலமுடன் இருக்கிறார் - குடும்பத்தினர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.