ETV Bharat / bharat

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார் - ஹைதராபாத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 11, 2022, 9:47 AM IST

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான 'ரெபெல் ஸ்டார்' கிருஷ்ணம் ராஜூ (83) உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (செப் 11)அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை (செப் 12) இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் இன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணம் ராஜூக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவர் நடிகர் பிரபாஸின் நெருங்கிய உறவினராவார். 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக இதயம், சிறுநீரக செயல்பாடு அவருக்கு மோசமடைந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அதிகாலை 3.16 மணியளவில் மாராடைப்பு காரணமாக காலமானார்.

இதையும் படிங்க: Google ஏன் சாம்பல் நிறத்தில் உள்ளது..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.