ETV Bharat / bharat

ACB Raid in Karnataka: ட்ரைனேஜ் பைப்பில் பணம் பதுக்கி வைப்பு - Anti Corruption Bureau raid in Karnataka

அரசு அலுவலர் ஒருவர் வீட்டில் ஊழல் தடுப்பு அலுவலர்கள்(Anti Corruption Bureau) நடத்திய சோதனையில் வடிகால் குழாய்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பிடிபட்டது.

ACB Raid in Karnataka, Officers found money in drainage Pipe, Kalaburagi
ACB Raid in Karnataka
author img

By

Published : Nov 24, 2021, 5:48 PM IST

Updated : Nov 24, 2021, 6:06 PM IST

கர்நாடக மாநிலத்தில் இன்று ஊழல் தடுப்பு அலுவலர்கள்(ACB-Anti Corruption Bureau) அரசு ஊழியர்களை குறி வைத்து மெகா சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 15 அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதில் பணம், நகை, பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த ரெய்டின் போது அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் வடிகால் குழாய்களில் பணம் பதுக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் கல்புர்கியை சேர்ந்த பொதுப் பணித்துறை ஜூனியர் இன்ஜினியரான சாந்த கௌடா என்பவரின் வீட்டில் இன்று காலை ஊழல் தடுப்பு அலுவலர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

இவர் முதலில் வீட்டைத் திறக்க 10 நிமிடத்திற்கு மேல் தாமதம் ஆகியுள்ளது. பின்னர் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது அவர் பதுக்கிவைத்திருந்த 40 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகை பிடிபட்டன.

நூதன முறையில் பணம் பதுக்கல்

இந்நிலையில், இரண்டு லாக்கரின் சாவியை தரமால் சாந்த கௌடா முரண்டு பிடித்துள்ளார். இந்த நேரத்தில்தான் அலுவலர்களுக்கு கூடுதல் சந்தேகம் ஏற்பட வீட்டின் பைப்புகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போதுதான், வீட்டின் மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு செல்லும் வடிகால் குழாயில் பணம் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக ப்ளம்பரை அழைத்து குழாயை அறுத்து பணத்தை அலுவலர்கள் கைப்பற்றினர்.

நூதன முறையில் பணம் பதுக்கல்

இவரது வீட்டில் சோதனை தொடர்ந்துவரும் நிலையில், பிடிபட்ட மொத்த பணம், நகை, சொத்துகள் கணக்கிடப்பட்டு முழு விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என ஊழல் ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிலிண்டர்களுக்கு மீண்டும் கூடுதல் மானியம் - ஒன்றிய அரசு நடவடிக்கை

Last Updated : Nov 24, 2021, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.