ETV Bharat / bharat

அர்னாப் கோஸ்வாமி வழக்கில் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் ஏன்? தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி! - தேவேந்திர ஃபட்னாவிஸ்

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி வழக்கில் அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.

Abetment of suicide case MVA Government MVA Government Vs Republic Republic Vs State of Maharashtra Arnab Goswami அர்னாப் கோஸ்வாமி குற்றப்பத்திரிகை தேவேந்திர ஃபட்னாவிஸ் மகா விகாஸ் அகாதி

author img

By

Published : Dec 6, 2020, 4:46 PM IST

மும்பை (மகாராஷ்டிரா): ராய்காட் காவலர்கள் அலிபாக் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல் ட்வீட்டில், “மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அர்னாப் கோஸ்வாமி வழக்கில் அவரச அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ஏன்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ச்சியாக மற்றொரு ட்வீட்டில், 'தனிநபர் சுதந்திரத்தை மீறக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து மகா விகாஸ் அகாதி (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி அரசாங்கம் எந்த படிப்பினையும் பெறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு கட்டட உள்அலங்கார வடிவமைப்பாளர் அன்வே நாயக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நவம்பர் 4ஆம் தேதி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

  • Isn’t this a mockery of Hon Supreme Court’s judgement?
    Are they again trying to suppress personal liberty?
    It seems that MVA Government has not learnt any lesson from the 2 strongly worded judgements delivered on the very same day this govt completed 1 year!

    — Devendra Fadnavis (@Dev_Fadnavis) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அன்வே நாயக் மனைவி அக்ஷதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி மாநில காவல்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமி மீது 1914 பக்கங்கள் குற்றப் பத்திரிகை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.