ETV Bharat / bharat

கடற்படை மாலுமி கடத்தல்: வனப்பகுதியில் உயிருடன் கொளுத்திய பயங்கரம்! - டற்படை மாலுமியை கடத்தி, தீ வைத்து கொன்ற சம்பவம்

மும்பை: பால்கரில் பணத்திற்காக கடற்படை மாலுமியை கடத்தி, தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை
மும்பை
author img

By

Published : Feb 7, 2021, 2:35 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் ராஞ்சியை சேர்ந்த டூபே, கோவையில் உள்ள ஐ.என்.எஸ் அக்ரானியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் சொந்த ஊர் சென்றுவிட்டு, மீண்டும் பணியில் சேர சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அப்போது, அவரை விமான நிலையம் வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர், குடும்பத்தினரை தொடர்புகொண்டு 10 லட்சம் ரூபாய் பணத்தை கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர். குடும்பத்தினர் பணத்தை ஏற்பாடு செய்வதற்குள், டூபேவை மகாராஷ்டிராவில் பால்கருக்கே கொண்டு சென்று, வனப்பகுதியில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அவரின் கை, கால்களை கயிற்றால் கட்டி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். தீக்காயங்களுடன் அங்கிருந்து சாலைக்கு ஓடி வந்த அவரை, அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 விழுக்காடு தீ காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிர் போகும் இறுதி நிமிடங்களில், போலீஸிடம் நடந்ததை அவர் விவரித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.