பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டம் ரானெபென்னூர் நகரில் உள்ள ரங்கநாத் நகரில் புட்டவா கோட்டூர் (75) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் ஹனுமந்தப்பா இறந்து விட்டார். இவருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள் மற்றும் 20 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
28 ஏக்கர் நிலமும் 8 வீடுகளும் உள்ளன. இவ்வளவு பெரிய குடும்பமும், சொத்தும் இருந்தும் புட்டவாவை யாரும் கவனிப்பதில்லை. அதேநேரம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய பிரச்னையும் புட்டவாவுக்கு உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடத்தில் இருந்தே தினமும் சாப்பாடு பெற்று புட்டவா வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையை முதியோர் நலத்துறை அலுவலர்களிடம் புட்டவா முறையிட்டு அழுதுள்ளார். அவர்கள் புட்டவாவிற்கு முதியோர் இல்லம் அளிப்பதாக கூறியுள்ளனர். இருப்பினும் ஹவேரி மாவட்ட காவல் ஆய்வாளர் மூலம் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவுக்கு தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி புட்டவா கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சிசிடிவி: சகோதரரின் மனைவியை வெட்டி கொலை செய்த இளைஞர்