ETV Bharat / bharat

Delhi Aam Aadmi MLA: கட்டுக்கட்டாக பணத்துடன் சட்டபேரவைக்கு வந்த எம்.எல்.ஏ... என்னவா இருக்கும்? - மொகிந்தர் கோயல்

அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பணி நியமனத்திற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் பெறுவதாகக் கூறி, சட்டப் பேரவை கூட்டத்திற்கு ரூபாய் நோட்டுகளுடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ
author img

By

Published : Jan 18, 2023, 10:06 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே காணப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலிலும், பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி 15 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது.

இதனால், ஆளுநருக்கும், அரசுக்குமான உறவில் கூடுதல் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மதுபான ஊழல், சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் குறித்த வீடியோக்கள் என தொடர்ச்சியாக அரசுக்கு ஆளுநர் தரப்பு மற்றும் மத்திய அரசு கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் டெல்லியில் துவங்கியது. கூட்டம் தொடங்கிய நாளே ஆளுநர் குறித்த கடுமையான விமர்சனங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்தார். மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் தனக்கு தலைமை ஆசிரியர் போல் செயல்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி சட்டப் பேரவைக் கூட்டத்தில் புதிதாக பூதாகரம் வெடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று (ஜன.18) நடந்த 3-வது நாள் சட்டப் பேரவை கூட்டத்திற்குப் பெட்டியுடன் நுழைந்த ஆம் ஆத்மி கட்சி ரிதாலா தொகுதி எம்.எல்.ஏ. மொகிந்தர் கோயல், பெரும் குண்டை போட்டு உடைத்தார்.

ரோகினி பகுதியில் உள்ள அரசின் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் செவிலியர் உள்பட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும், பெரும் தொகையை தனியார் ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் பெற்று ஊழல் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் பிற பணிகளுக்கான பணியாளர் நியமனத்தில் 80 சதவீத பழைய ஊழியர்களைத் தக்க வைக்கும் வகையில் டெண்டர் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால், அதற்குப் பதிலாக செவிலியர் பணி நியமனம் என்ற பெயரில் பெரிய அளவில் பணம் கையாடல் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பணி நியமனத்திற்குப் பின்னரும் கூட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும்; ஒப்பந்ததாரர்கள் அவர்களின் சம்பளத்தில் பெரும் தொகையை கையாடல் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போராட்டம் நடத்த முயன்ற செவிலியர்கள், பிற பணியாளர்கள் அடித்து விரட்டப்பட்டதாகவும் மொகிந்தர் கோயல் கூறி உள்ளார்.

மேலும் ஊழல் குறித்து ஆளுநர் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வர உயிரை பணயம் வைத்து தனியார் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மொகிந்தர் கூறினார்.

மேலும் தனியார் ஒப்பந்ததாரர்களின் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மொகிந்தர் கோயலின் திடீர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: BRS meeting: தேசிய அளவில் 3-வது கூட்டணி உருவாகிறதா? கே.சி.ஆர் நடத்திய கூட்டத்தின் ஹைலைட்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.