ETV Bharat / bharat

விமான நிலையங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! - தேசிய அனல் மின் நிறுவனம்

டெல்லி: மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) என்டிபிசியின் துணை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

விமான நிலையங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

author img

By

Published : Nov 5, 2020, 9:38 PM IST

தேசிய அனல் மின் நிறுவனத்தின் (என்.டி.பி.சி.) துணை நிறுவனமான வித்யுத் வியாபர் நிகாம் (என்.வி.வி.என்) சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட விமான நிலையங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. இதற்கான ஒப்பந்தம் ஏ.ஏ.ஐ., என்.டி.பி.சி. மற்றும் என்.வி.வி.என் ஆகியவற்றின் மூத்த அலுவலர்கள் முன்னிலையில் இன்று (நவம்பர் 5) கையெழுத்தானது.

இது தொடர்பாக ஏ.ஏ.ஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை ஏ.ஏ.ஐ. சொந்தமாகக் கொண்டு, நிர்வகித்து வருகிறது. இந்த விமான நிலையங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கும் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) என்டிபிசியின் துணை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல்கட்ட செயல்முறையானது, தமிழ்நாடு, ராஜஸ்தானில் உள்ள விமான நிலையங்களில் விரைவில் தொடங்கும். தமிழ்நாடு, ராஜஸ்தானில் உள்ள விமான நிலையங்களில் தேவைப்படும் சூரிய திறன் முறையே 55 மெகாவாட் மற்றும் 8 மெகாவாட் ஆகும். இவற்றை 100 விழுக்காடு சூரியசக்தியால் இயங்கும் விமான நிலையங்களாக மாற்றும் முயற்சியாக இந்த திட்டம் அமைய இருக்கும்.

பொது கட்டணம் வசூலிக்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமும், விமான நிலையங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கான இந்திய அரசின் முன்முயற்சிகளுக்கு ஏ.ஏ.ஐ. மற்றும் என்.வி.வி.என் ஆகியவை இணைந்து செயல்படும்.

பல்வேறு விமான நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு ஒரு திட்டம் உருவாக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏஏஐ விமான நிலையங்களில் தற்போது 3.5 மெகாவாட் (மெகா வாட் பீக்) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.