டெல்லி : ரேஷன் கார்டுன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு ஒன்றிய நுகர்வோர், பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்தார்.
அந்தப் பதிலில், “ரேஷன் கார்டு ஆதார் அட்டை இணைப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி கால அவகாசம் அளிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்தப் பதிலில் 92.8 விழுக்காடு ரேஷன் கார்டுகள் இதுவரை ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி முதல் தொடங்கி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க : ரேஷன் கடைகளில் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி இல்லை - கூட்டுறவுத் துறை