ஐதராபாத்: ஜவஹர் நகரில் வசித்து வரும் கூழித்தொழிலாளி பெட்டா மாரையா(30). இவர் பல வருடங்களாக குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 6) மாரையா தனது தாயுடன் இரவு 8.30 மணியளவில் பாலாஜி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் (28) கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மாரையா குடிபோதையில் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். தன்னை தற்காத்து கொள்வதற்காக அப்பெண் அந்த வாலிபரை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மேலும் கோபம் அடைந்த மாரையா அப்பெண்ணிடம் இன்னும் மோசமாக நடந்துள்ளார். சாலையில் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்துள்ளார். இச்செயலை அருகில் இருந்த மாரையாவின் தாயாரும் வேடிக்கை பார்த்து கொண்டு, தன் மகன் செய்வதை தடுக்காமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: வாகனத்திற்கான காப்பீடு உரிமம் வழங்குவதில் முறைகேடு: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு பெறுவதில் சிக்கல்!
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு பெண் சம்பவ இடத்தில் நின்று மாரையாவை எதிர்த்து கேட்டதற்கு அப்பெண்ணயும் தாக்க முயன்றுள்ளார். ஆடை கிழிக்கப்பட்ட நிலையில் அப்பெண் செய்வது அறியாது 15 நிமிடங்கள் சாலையில் அமர்ந்து கதறி அழுதுள்ளார்.
இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்ததோடு அவர்களது மொபைல் போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் மாரையா அப்பகுதியை விட்டுச் சென்றவுடன் அப்பெண்ணிற்கு போர்வையை கொடுத்து உதவி உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜவஹர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் மாரையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்: தந்தையின் கொலை சதியில் இருந்து துரிதமாக மீண்ட 13 சிறுமி!