கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் இந்திரா நகரில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தீபாவளியை முன்னிட்டு அக்.18ஆம் தேதி வெளியூருக்கு சென்றனர். அதன்பின் நேற்று(அக். 24) வீடு திரும்பினர். அப்போது வீட்டின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பூஜை அறையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.
அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் பெயர் பகதூர் என்பதும் அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாராணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை "அந்த வார்த்தையை" சொல்லி அழைத்த இளைஞருக்கு 18 மாதங்கள் சிறை