ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத்தில் மருத்துவத்துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தவர், ப்ரீத்தி (26). இவரை சீனியர் மாணவர்கள் துன்புறுத்தியதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த ப்ரீத்தி நேற்று (பிப்.26) உயிரிழந்தார்.
இதனையறிந்த அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், ப்ரீத்தி தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் ப்ரீத்தியின் உடலை வாங்கவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்த நிலையில் ப்ரீத்தி உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.
பின்னர் இன்று (பிப்.27) காலை அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ஹைதராபாத்தில் இருந்து ஜனகாமா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கிர்னிதாண்டாவுக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ப்ரீத்தியின் தந்தை நரேந்தர் கூறுகையில், “எனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார். யாரோ சிலர் எனது மகளுக்கு ஊசி செலுத்தியுள்ளனர். அதனால் தான் இறந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு TO அஸ்ஸாம்.. ராணுவ அதிகாரியை திருமணம் செய்துகொள்ள சென்ற இளம்பெண் கொலை.. பிளாஸ்டிக் கவரில் மீட்கப்பட்ட உடல்..