உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு ஆதரவாளர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து அவருக்கு அயோத்தியில் கோயில் கட்டியுள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர், உத்தரப்பிரதேச முதலமைச்சருக்குக் கோயிலைக் கட்டியுள்ளார். அயோத்தியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள மவுரியா கா பூர்வா கிராமத்தில் பிரபாகர் மவுரியா என்பவர், இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயிலில், முதலமைச்சர் ஆதித்யநாத் சிலைக்கு வில் அம்பு பொருத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தினமும் மாலையில் அவருக்கு ஆரத்தி காட்டப்படுகிறது. ராமர் கோவிலை யோகி ஆதித்யநாத் கட்டியதால், யோகி ஆதித்யநாத் கோயிலை கட்டியதாக, யோகி ஆதித்யநாத் கோயிலைக் கட்டிய பிரபாகர் மவுரியா கூறியுள்ளார்.
தன்னை முதலமைச்சர் யோகியின் பக்தர் என்று வர்ணித்த பிரபாகர் மவுரியா, யோகி ஆதித்யநாத்துக்காக பாடல்களை எழுதிப் பாடுவதாகக் கூறினார். அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுபவருக்கு அவரின் கோயிலைத்தானே கட்டுவேன் என்று சபதம் செய்ததாக பிரபாகர் மவுரியா கூறினார். அதனால்தான் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோயிலைக் கட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 2019இல், ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றத்தில் இருந்து பச்சை கொடி கிடைத்தது. பின் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் 5, 2020அன்று தொடங்கியது.
இந்த காரணத்திற்காக, அவர் கோயிலில் தினமும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வணங்குகிறார்.
இதையும் படிங்க: Video: காரில் வந்து பூச்செடிகளைத் திருடிய டிப்டாப் ஜோடி