ETV Bharat / bharat

Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை! - 15 years of virat kholi

Virat Kohli sums up 15 years in international cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

விராட் கோலி கடந்து வந்த பாதை
விராட் கோலி கடந்து வந்த பாதை
author img

By

Published : Aug 18, 2023, 9:12 PM IST

ஹைதராபத்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் ஆகிறது. கிங் கோலி என அழைக்கப்படும் இவர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி 2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இவர் அவரது ரசிகர்களால் ரன் மிஷன் என்று அழைக்கப்படுகிறார். அதற்கான காரணம் பவுண்டரிகள் அடிக்க முடியாத மைதானத்தில் கூட ஓடியே ரன்கள் சேர்ப்பார். திரைப்பட நடிகர் போல் எப்போதும் உடல் அமைப்பை கட்டுக்குள் வைத்துள்ளவர் கோலி.

2013ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு ரன்கள் ஓடியே எடுத்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் 510 கிலோ மீட்டர் ஓடி இருக்கிறார் என ESPN cricinfo தரவுகள் கூறுகிறது. விராட் கோலி பவுண்டரி அல்லாத ரன்களில் 277 கிலோ மீட்டரும், நான் ஸ்டிரைக்ளில் இருக்கும் போது 233 கிலோ மீட்டரும் ஓடியுள்ளார்.

விராட் கோலி சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டு தொடரின் நாயகனாக தேர்வாகி உள்ளார். மேலும், சேஸிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். சேஸிங்கில் பேட் செய்த பத்து போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. விராட் கோலி எட்டு முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

கோலி விளையாடிய 83 மைதானங்களில் 43 மைதானங்களில் சதம் அடித்துள்ளார். இதில் அடிலெய்ட் மைதானம் இவருக்கு மிகவும் பிடித்த மைதானமாக இருந்துள்ளது. அங்கு மட்டும் 5 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். முன்னதாக சச்சின் 53 மைதானங்களில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

உலக கோப்பையின் அறிமுகம்: 2011ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை அறிமுகத்தில் அரைசதம் அடித்தார். உலக கோப்பை அறிமுகத்தில் இரட்டை சதம் டி20 உலக கோப்பையில் அரை சதம் அடித்த முதல் வீரர் ஆனார்.

இரட்டை சதங்கள்: 2016ம் ஆண்டு வரை விராட் கோலி 41 டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்கள் விளாசி இருந்தார். ஆனால் ஒரு முறை மட்டுமே 150 ரன்களை கடந்து இருந்தார். ஆனால் 2016 முதல் 2019ம் ஆண்டுகளில் அவர் 7 இரட்டை சதங்களை விளாசினார். மேலும், தொடர்ந்து 4 இரட்டை சதத்தை அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதுவரை சர்வதேச 275 ஒருநாள் போட்டிகளில் 12,898 ரன்களை குவித்துள்ள கோலி, 46 சதமும், 65 அரை சதமும் அடித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள், 29 சதம் மற்றும் 29 அரை சதம் அடித்துள்ளார். அதேபோல் 115 T20 கிரிக்கெட் போட்டிகளில் 39 அரை சதம், ஒரு சதம் என 4,008 ரங்கள் எடுத்துள்ளார். இதுவரை மொத்தமாக 76 சதங்கள் விளாசி சர்வதேச இடத்தில் இரண்டாவதாக உள்ளார்.

இப்படி அவரது சாதனைகளை செல்லிக்கொண்டே போகாலாம். அவர் தனது கிரிக்கெட் வாழக்கையின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை சாதனை படைத்து கொண்டே தான் இருக்கிறார். சச்சினின் சாதனையை ஒருவரால் முறியடிக்க முடியுமானால் அது விராட் கோலியால் முடியும் என உலகமே அவரை கொண்டாடி வருகிறது. 15 ஆண்டுகளில் அவர் போல் உச்சம் தொட்ட வீரரும் யாரும் இல்லை விமர்சிக்கப்பட்டவரும் யாரும் இல்லை என்பதை நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க: ஃபிடே உலக கோப்பை செஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.