பெலகவி(கர்நாடகா): கர்நாடகா மாநிலம் கானாபுரா தாலுகாவின் நெராசா கவுலிவாடா கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 25) மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்து சில மணி நேரங்களே ஆன அந்த குழந்தை மீட்கப்பட்டு உடனடியாக கானாபுரா பொது மருத்துவமனையில் உள்ள குழந்தை வார்டில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைநல மருத்துவர் டாக்டர் பவன் பூஜாரி குழந்தையை பரிசோதித்தார். சிறிது நேரம் பிளாஸ்டிக் பையில் குழந்தை இருந்ததால் உடல்நிலை மோசமடைந்தது என அவர் கூறினார்.
எனவே, குழந்தை மேல் சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சொத்துக்காக எலி மருந்து கொடுத்து தாயைக் கொன்ற இளம்பெண்