பந்த்வால் (கர்நாடகா): தட்சிணா கன்னடா மாவட்டம், பந்த்வால் தாலுகாவில் சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (அக்.08) காலை ஏழு மணியளவில் சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றபோது காரில் பயணம் நபர்கள் சிலர் அவரை வலுக்கட்டாயமாக கடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரை ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு கூட்டிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுவிட்டு அவரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
பந்த்வலா தாலுகாவின் பிரம்மரகுட்லு பகுதிக்கு அருகில் தன்னை மூன்று முதல் நான்கு நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு விட்டுச் சென்றதாக சிறுமி புகார் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
போக்சோ சட்டம், அதன் தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மங்களூரு நகரில் உள்ள லேடி கோஷென் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 8 பேர் கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!