ETV Bharat / bharat

பாலியல் பலாத்கார முயற்சி - இளம்பெண்ணை காப்பாற்றிய திருநங்கைகள் - A man who tried to rape was beaten up in Bangalore

பெங்களூருவில் பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து இளம்பெண் ஒருவரை திருநங்கைகள் காப்பாற்றினர்.

பெங்களூருவில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற நபரிடமிருந்து காப்பாற்றிய திருநங்கைகள்

author img

By

Published : Jul 5, 2022, 3:13 PM IST

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள விவேக் நகரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே மாநிலத்தைச் சேர்ந்த மசூரல் ஷேக் என்ற நபர் அந்த பெண்ணின் வீடு உள்ள தெருவில் வகிக்கிறார். அவர் சில நாட்களாக அங்கும், இங்கும் அலைந்து நோட்டம் விட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண் தனியாக வசித்து வருவதை உறுதி செய்த பின் கடந்த ஜூலை 2 அன்று அப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

திடீரென உள்ளே நுழைந்ததால் செய்வதறியாத திகைத்த அப்பெண் அந்நபரிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். தான் பணம் தருவதாகவும், தன்னை விடக் கோரியும் கேட்டு பார்த்துள்ளார். இதனையடுத்து காப்பாற்றுமாறு கூச்சல் போட்டுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு மேல் வீட்டிலிருந்த இரண்டு திருநங்கைகள் வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அந்த நபரை தாக்கி அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து காவல்துறை DCP ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நபர் மீது வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்தார். மேலும் திருநங்கைகளின் இந்த துணிச்சல் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.