டெல்லி: விமானம் தாமதத்தால் ஏற்பட்ட விரக்தியில், விமானம் கடத்தப்பட்டதாக ட்வீட் போட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த சர்வதேச விமானம் மோசமான வானிலை காரணங்களால் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
காலை 9.45 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் நண்பகல் 1.40 மணி அளவில் மீண்டும் புறப்பட அனுமதி கிடைத்துள்ளது. விமானம் தாமதாமான விரக்தியில் ராஜஸ்தான் மாநிலம், நாகூரைச் சேர்ந்த இளைஞர் மோதி சிங் ராத்தோர், விமானம் கடத்தப்பட்டதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்து கீழ் இறக்கப்பட்ட அவரிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து டெல்லி போலீசார் ராத்தோரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் விமான தாமதத்தால் ஏற்பட்ட விரக்தியில் அப்படி பதிவிட்டதாக இளைஞர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: குடியரசு தினம்: வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்த நாடாளுமன்றம்.