ETV Bharat / bharat

தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் கைது - குஜராத் பயங்கரவாத தடுப்புப் படைக் குழுவினர்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டியை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படைக் குழுவினர் கைது செய்தனர்.

A Gujarat ATS team on Saturday arrested Dawood's aide Abdul Majeed Kutty from Jamshedpur, Jharkhand.

author img

By

Published : Dec 27, 2020, 5:18 PM IST

ஜாம்ஷெட்பூர்: 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாவூத் இப்ராஹிம் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.

இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான இவர், பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. மேலும், இவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையில், கடத்தல் மற்றும் அந்நிய செலவாணி சட்டத்தின் கீழ் தாவூத் இப்ராஹிமின் சொத்துகளை அரசு ஏலத்தில் விற்றது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டியை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படைக் குழுவினர் நேற்று (டிச. 26) கைது செய்தனர்.

இவர் 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமைப்பின் உத்தரவின் பேரில், குடியரசு தினத்தன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குண்டுவெடிப்பு நடத்த தாவூத் இப்ராஹிம் அனுப்பிய வெடிபொருள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இவர், கடந்த பல ஆண்டுகளாக ஜார்க்கண்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 106 கைத்துப்பாக்கிகள், 750 தோட்டாக்கள், நான்கு கிலோ வெடிபொருட்களை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏலம் விடப்படும் நிழல் உலக தாதாவின் சொத்துக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.