சுற்றுப்புறங்களில் கழிவுகளை குவிப்பதைத் தடுப்பதற்கான பரப்புரைகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. ஆனாலும், யாரும் குப்பை கொட்டும் பழக்கத்தை விடுவதாக இல்லை.
கர்நாடக மாநிலம் மங்களூரில் பெல்ஜியத்தைச் சேர்ந்த பெண்ணான எம்மா பெர்னாண்டஸ் என்பவர் சித்ராபூர் கடற்கரையை சுத்தம் செய்வதற்காக பத்து நாட்களை ஒதுக்கியுள்ளார்.
இவரது கணவர் டென்சில் பெர்னாண்டஸ் மங்களூரில் வசித்து வருகிறார். கரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெல்ஜியத்திற்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார்.
இதனைப் பயன்படுத்தி தற்போது ஒருநாளைக்கு இரண்டுமுறை மங்களூருக்கு வருகை தந்து இப்பணியை செய்கிறார். மேலும், ஹாலந்தின் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை ஐ.எஸ்.டி ஆன்லைன் ஆலோசனை மற்றும் சிகிச்சையை எம்மா வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க: பெங்களூரு விமான நிலையப் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு!